கோர விபத்து... ஆட்டோ மீது மினி வேன் மோதி 8 பேர் பலியான சோகம்!

கோர விபத்து... ஆட்டோ மீது மினி வேன் மோதி 8  பேர் பலியான  சோகம்!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பயணிகள் சென்ற ஆட்டோ மீது மினிவேன் மோதிய கோர விபத்தில் சம்பவம் இடத்திலேயே 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து மினி வேன் ஒன்று மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் கல்யாணை நோக்கி சென்று கொண்டிருந்தது. புனே மாவட்டத்தில் உள்ள ஜோகாவிற்கு மின்வேன் சென்று கொண்டிருந்த போது, திடிரேன கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது பயங்கர வேகத்தில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த 7 பேர், மினி வேன் ஓட்டுநர் என மொத்தம் 8 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


பரபரப்பு... ஆளுநருக்கு எதிராக கல்லூரிகளில் பேனர்! களத்தில் இறங்கிய மாணவர் அமைப்பு!

கனமழை... களத்தில் சுழன்றடிக்கும் கனிமொழி எம்.பி

1000 ரூபாய் கடனுக்காக நண்பர் குத்திக்கொலை... சடலத்துடன் காவல் நிலையத்தில் சரணடைந்த இளைஞர்!

நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.207 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி

81 கோடி இந்தியர்களின் தரவுகள் திருட்டு... 4 இளைஞர்கள் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in