19 நாட்களில் முறிந்த காதல் திருமணம்...தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்..!

மன முறிவு
மன முறிவு

காதல் கணவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்த இளம் பெண், திருமணம் முடிந்த 19 நாட்களில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணாடம் காவல் நிலையம்
பெண்ணாடம் காவல் நிலையம்

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள நத்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகள் ஷர்மிளா. இவர் விருதாச்சலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தையல் பயிற்சி படித்து வந்தார். இதற்காக தினமும் அவர் தனியார் பேருந்தில் விருதாச்சலத்திற்கு சென்றுவந்த நிலையில் ஷர்மிளாவுக்கும், அந்த பஸ் டிரைவரான விருத்தாசலம் அடுத்த தொட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் சத்யராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் காதலித்து வந்த நிலையில் 11-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனால் தனது மகளை காணவில்லை என்று ஷர்மிளாவின் தாய் சாந்தி பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது பற்றி அறிந்ததும் காதல் ஜோடி விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.

இரு தரப்பு உறவினர்களையும் அழைத்துப் பேசி சமாதானப்படுத்தி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சத்யராஜுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவரை நம்பி ஏமாந்து விட்டதாகவும் கூறி ஷர்மிளா பெற்றோர் வீட்டிற்கு வந்து தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். மேலும் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஷர்மிளா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய் சாந்தி பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் ஷர்மிளாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாந்தி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த 19வது நாளில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!

‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!

நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in