கிராமமே சோகம்... நேருக்கு நேர் மோதிய சிலிண்டர் லாரி... பைக்கில் வந்த நண்பர்கள் 3 பேர் பலி!

கிராமமே சோகம்... நேருக்கு நேர் மோதிய சிலிண்டர் லாரி... பைக்கில் வந்த நண்பர்கள் 3 பேர் பலி!

பெரம்பலூரில் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி பைக் மீது மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா கோட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்த சஞ்சீவியின் மகன் வினோத் (19). இவரும், அதே பகுதியை சேர்ந்த ராஜூ மகன் ராம் (20), செல்வராஜ் மகன் ஆனந்த் (22) ஆகியோர் நண்பர்கள். இவர்கள் 3 பேரும் நேற்றிரவு பெரம்பலூர் நோக்கி ஒரே பைக்கில் சென்றனர்.

அப்போது பெரம்பலூர்- துறையூர் மாநில நெடுஞ்சாலையில் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் அருகே சென்றபோது அந்த வழியாக சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வினோத், ராம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த ஆனந்த் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே ஊரை சேர்ந்த 3 இளைஞர்கள் விபத்தில் பலியாகியுள்ளது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in