
நீலகிரியில் வளர்ப்பு நாயை சிறுத்தை ஒன்று வேட்டையாடி இழுத்துச் செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்துலூர் இந்திரா நகர், எம்.ஜி.ஆர் நகர், நத்தம், ரிச்மண்ட் உள்ளிட்ட பகுதியில் சமீப காலமாக சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வருவதாக அந்தப்பகுதிவாசிகள் அச்சம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நத்தம் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் இரவு நேரத்தில் நுழைந்த சிறுத்தை ஒன்று அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட வளர்ப்பு நாயை வேட்டையாடி வாயில் இழுத்து வந்து வீட்டின் வாசலில் நிதானமாக நின்று, சில நிமிடங்கள் கழித்து சென்றுள்ளது.
இந்த காட்சி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், இணையத்தில் வைரலாகி குடியிருப்பு வாசிகளை பெரிதும் அச்சமடைய செய்துள்ளது. வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.