உயிரிழந்த மனைவி... அழுகிய உடலுடன் வசித்து வந்த கணவர்!

அனுசியா
அனுசியா

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உடல் நலக்குறைவால் மனைவி இறந்துவிட்ட நிலையில் அவரது அழுகிய  உடலுடன் கணவர் வாழ்ந்து வந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (59).  இவருக்கு, அனுசியா என்ற மனைவியும், கல்லூரியில் படித்துவரும் இரு மகள்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி உடன் மூர்த்தி பேசிக் கொள்வதில்லை என கூறப்படுகிறது. இந்த சூழலில், தைராய்டு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அனுசியா படுக்கையிலேயே உயிரிழந்துள்ளார். அது தெரியாமல் மூர்த்தி தனியறையிலேயே வசித்து வந்துள்ளார்.

இதனிடையே, வார விடுமுறைக்காக அவரது மூத்த மகள் நேற்று இரவு வீட்டிற்கு வந்த நிலையில், வீடு முழுவதும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்து அனுசியாவை பார்க்க சென்றார். அப்போது, அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதைத்தொடர்ந்து விருத்தாசலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

மூர்த்தி வீடு
மூர்த்தி வீடு

உடலை கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மனைவி இறந்ததுகூட தெரியாமல் வீட்டிலேயே வசித்து வந்த மூர்த்தியை சந்தேகத்தின்பேரில் விசாரித்து வருகின்றனர். இதையும் வாசிக்கலாமே...

இன்று சந்திர கிரகணம்... 8 மணி நேரம் தோஷம்... இரவு சாப்பிடக் கூடாதா?

வரலாற்று சாதனை... ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை வென்றது இந்தியா!

அதிர்ச்சி... கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; சிக்கியது கடிதம்!

தீபாவளி பண்டிகைக்கு 10,975 சிறப்புப் பேருந்துகள்...நவம்பர் 9 முதல் இயக்கப்படுகிறது!

கெளதம் மேனனுடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in