அதிர்ச்சி வீடியோ... மின்னல் வேகத்தில் பாய்ந்த கார்... நடந்து வந்தவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு

அதிர்ச்சி வீடியோ
அதிர்ச்சி வீடியோ

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இன்று பட்டப்பகலில் தாறுமாறாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இன்று எல் போர்டு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் அதிவேகமாக வந்து அந்த வழியாக நடந்து சென்றுக் கொண்டிருந்த பாதசாரியை அடித்துத் தூக்கி வீசி அருகில் நின்றிருந்த ஆட்டோ மீது மோதி நின்றது.

இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் பழனி என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஜெயக்குமார் என்பவரை கைது செய்த போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ‘’பிரேக் பிடிப்பதற்குப் பதிலாக ஆக்சிலேட்டர் கொடுத்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்தியது’’ என ஜெயக்குமார் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in