பயங்கரம்! கப்பலில் பழுது பார்த்தபோது காஸ் வெடித்து ஊழியர் பலி; தீக்காயத்துடன் 3 பேர் அனுமதி

பயங்கரம்! கப்பலில் பழுது பார்த்தபோது காஸ் வெடித்து ஊழியர் பலி; தீக்காயத்துடன் 3 பேர் அனுமதி

சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது நீக்கும் பணியின் போது காஸ் பைப் வெடித்து ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசா மாநிலத்திலிருந்து கடந்த 31ம் தேதி எம்டி பேட்ரியாட் என்ற கப்பல் பழுது நீக்கும் பணிக்காக சென்னை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. சென்னை துறைமுகம் வளாகத்தில் கோஸ்டல் ஒர்க் பிளேஸ் எந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த கப்பலில் இருந்த ஒரு போல்ட்டை காஸ் கட்டர் மூலமாக அகற்றும்போது அருகில் இருந்த காஸ் பைப் லைன் மீது பட்டு வெடித்து இருக்கிறது. இதில் அந்த பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

மேலும் காசிமேட்டை சேர்ந்த ஜோஸ்வா, தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் மற்றும் ஜீவரத்தினம்நகரை சேர்ந்த புஷ்ப லிங்கம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை துறைமுகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in