நடைபாதையில் சென்ற தம்பதி மீது கார் மோதிய விபத்து... பிரபல நடிகர் கைது!

நாகபூஷணா - விபத்தை நிகழ்த்திய கார்
நாகபூஷணா - விபத்தை நிகழ்த்திய கார்

கர்நாடகாவில் நடைப்பாதையில் நடந்து சென்ற தம்பதி மீது பிரபல கன்னட நடிகர் நாகபூஷணாவின் கார் மோதியதில், பெண் பலியாகியுள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்கு ஆளான தம்பதி
விபத்துக்கு ஆளான தம்பதி

நடிகை சம்ந்தா கதா நாயகிய நடித்த ’யூ டர்ன்’ படத்தில் நடித்து பிரபலமானவர் கன்னட நடிகர் நாகபூஷணா. இவர் 2018-ம் ஆண்டில் இருந்து கன்னட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பெங்களூரில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு இல்லம் திரும்பும் வழியில் உத்தரஹல்லியில், நடைபாதையில் சென்றுக் கொண்டிருந்த தம்பதி மீது நாகபூஷணாவின் கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த இருவரையும் நாகபூஷணா தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் பெண் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த பெண்ணின் கணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துத் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், கவனக்குறைவாக காரை இயக்கியதே விபத்திற்கு காரணம் எனக் கூறி நடிகர் நாகபூஷணாவை கைது செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in