கும்பாபிஷேகம் பார்க்கச் சென்ற சிறுமியின் உயிரைப் பறித்தது கான்கிரீட் ஸ்லாப்... கிராம மக்கள் சோகம்!

கும்பாபிஷேகம் பார்க்கச் சென்ற சிறுமியின் உயிரைப் பறித்தது கான்கிரீட் ஸ்லாப்... கிராம மக்கள் சோகம்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மருதாத்தூர் கிராமத்தில் இன்று அருள்மிகு முத்துமாரியம்மன், அருள்மிகு செல்லியம்மன், அருள்மிகு அய்யனார் மற்றும் விநாயகர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் பார்ப்பதற்காக கோவிலுக்கு அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள, 20 ஆண்டு பழமைவாய்ந்த அரசு கட்டிடத்தின் மீது பக்தர்கள் ஏறி நின்றுள்ளனர். கும்பாபிஷேகம் முடிந்ததும் பள்ளி கட்டிடத்தின் அருகில் இருந்த மகளிர் சுய உதவி குழு கட்டிடத்தின் வழியாக இறங்கியுள்ளனர்.

அப்போது பாரம் தாங்காமல் முன்பக்க கான்கிரீட் ஸ்லாப் உடைந்து அந்த வழியாக வந்த ஸ்ரீமுஷ்ணம் அடுத்த காவனூர் கிராமத்தைச் சேர்ந்த சுகந்திராதேவி (15) என்ற சிறுமியின் தலை மீது விழுந்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

சுகந்திராதேவி
சுகந்திராதேவி

சுகந்திராதேவியை மீட்ட பொதுமக்கள் அருகில் உள்ள வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து ஆவினங்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் கும்பாபிஷேகம் பார்ப்பதற்காக வெளியூரில் இருந்து தனது பாட்டி வீட்டிற்கு வந்த பேத்தி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in