பரபரப்பு...ரூ.1.25 கோடி மோசடி: பெண் தொழிலதிபர், பாஜக நிர்வாகி மீது வழக்கு!

பெண் தொழிலதிபர் சோனியா ரவிக்குமார்.
பெண் தொழிலதிபர் சோனியா ரவிக்குமார்.

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி மீது புகார் அளித்த பெண் தொழிலதிபர் மற்றும் அவர் தாய் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காவல்  ஆணையர் அலுவலகம்
சென்னை காவல் ஆணையர் அலுவலகம்

மயிலாடுதுறையைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் மணிகண்டன் என்பவர் நேற்று முன்தினம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது நண்பர் ஜெகன் என்பவர் மூலம் ஒன் ஸ்டிச் என்ற பெயரில் அண்ணா நகர், அடையாறு, ஆகிய பகுதிகளில் நவீன துணி கடைகள் (பொட்டிக்) ஆரம்பித்து நடத்தி வரும் சோனியா ரவிக்குமார் அறிமுகம் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

அப்போது சோனியா, தியாகராய நகரில் புதிய கிளையை ஆரம்பிப்பதற்கு முதலீடு செய்யுமாறு கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளார் . இதனை நம்பி முதற்கட்டமாக 7.50 லட்ச ரூபாயை ஆன்லைன் மூலம் செலுத்தியதாகவும் பின்னர் துணிகள் வாங்க 50 லட்சம், உட்கட்டமைப்பிற்காக 40 லட்சம், இதர செலவிற்காக 8 லட்சம் என மொத்தம் 1.25 கோடி ரூபாயை கடந்த ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கொடுத்துள்ளதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி ஏற்கெனவே அண்ணா நகரில் இயங்கி வரும் கிளைக்கு பல்வேறு உபகரணங்கள் வாங்கி கொடுத்ததுடன் ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை தானே செலுத்தியதாக தெரிவித்துள்ளார். பணத்தைப் பெற்று கொண்ட சோனியா முறைப்படி ஒப்பந்தம் செய்து தராமல் ஏமாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

சோனியா ரவிக்குமார்
சோனியா ரவிக்குமார்

இதனைத் தொடர்ந்து பணத்தை திருப்பி கேட்ட போது நீ யார் என்றே தெரியாது, உன்னிடம் நான் பணமே வாங்கவில்லை என கூறியதுடன் பலமுறை நள்ளிரவு குடித்துவிட்டு தன்னை தகாத வார்த்தையில் பேசியதாகவும் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்ட போது சோனியா ரவிக்குமார் மற்றும் அவரது தாய் தேவி சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

சோனியா ரவிக்குமார் தாய் தேவி
சோனியா ரவிக்குமார் தாய் தேவி

இதன் அடிப்படையில் சோனியா ரவிக்குமார் மற்றும் அவரது தாய் தேவி ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மோசடி , மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சோனியா ரவிக்குமார் இதுபோல் பலரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் அமர் பிரசாத் ரெட்டி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் அமர் பிரசாத் ரெட்டி

குறிப்பாக இந்த மோசடி வழக்கில் சிக்கிய சோனியா ரவிக்குமாரின் தாய் தேவி, பிரதமர் மோடி சென்னை வருகையின் போது ஆட்கள் அழைத்து வருவதில் பாஜக நிர்வாகியான தனது சகோதரி ஆண்டாளுக்கும் மற்றொரு நிர்வாகிக்கும் ஏற்பட்ட பணப்பிரச்சினையில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மற்றும் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக தேவி புகார் அளித்திருந்தார்.

இதன் பேரில், அமர்பிரசாத் ரெட்டி மீது கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அமர்பிரசாத் ரெட்டி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in