குடிபோதையில் ஆம்புலன்ஸை ஓட்டிய சிறைக்காவலர்... கார் மீது மோதி பயங்கர விபத்து!

விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸ்
விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸ்

போதையில் ஆம்புலன்ஸை ஓட்டி காரில் மோதி விபத்து ஏற்படுத்திய சிறைக்காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்திற்குள்ளான கார்.
விபத்திற்குள்ளான கார்.

இதனையடுத்து ஜெயசீலன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சிறைக்காவலர் ஹரிஹரன் மது போதையில் இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீஸார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து சிறை ஆம்புலன்ஸை பறிமுதல் செய்தனர். மேலும் மதுபோதையில் ஆம்புலன்ஸ் ஒட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சிறைக் காவலரிடம் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபோதையில் சிறைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸை ஓட்டி சென்று சிறைக்காவலர் விபத்து ஏற்படுத்திய சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in