பெங்களூருவில் இளம்பெண் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கழுத்து, கையை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது தாய் புகார் கூறியுள்ள நிலையில், போலீஸார், தற்கொலை வழக்கை, கொலை வழக்காகப் பதிவு செய்து சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள சுப்ரமணியாபுரா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 15-ம் தேதி பிரபுத்தா(20) என்ற இளம்பெண் குளியலையில் இறந்து கிடந்தார். அத்துடன் அவர் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது.
அதன் அருகில் குளியலறையில் கத்தியும் கிடந்தது. ஆனால், எந்த பொருளும் திருடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், பிரபுத்தா தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.
ஆனால், பிரபுத்தாவின் வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தாலும், பின்பக்க கதவு திறந்து கிடந்தது. எனவே, தனது மகள் பிரபுத்தா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், குளியலறையில் வைத்து கத்தியால் கழுத்து மற்றும் கையை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது தாய் போலீஸில் புகார் கூறியுள்ளார். அத்துடன் பிரபுத்தாவாவின் முகம் மற்றும் தலையின் பின்பகுதியில் பலத்த அடிபட்டிருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சுப்ரமணியபூர் காவல் நிலைய போலீஸார், 302 பிரிவின் கீழ் இந்த வழக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கொலை தொடர்பாக சில நபர்களைப் பிடித்து விசாரித்து வருவதாக போலீஸார் கூறியுள்ளனர். பிரபுத்தா பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.