பரபரப்பு... பிரபல பாடகர் மீது வழக்கு...கைதாக வாய்ப்பு!

சிப்பி கில்
சிப்பி கில்

வாகனம் நிறுத்துவது தொடர்பாக சக குடியிருப்புவாசியைத் தாக்கியதாக பிரபல பஞ்சாப் பாடகர் சிப்பி கில் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிப்பி கில்
சிப்பி கில்

பஞ்சாபி நடிகரும். பாடகருமான சிப்பி கில் சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் நடித்து வெளியிட்ட ’’குண்டகார்டி'’ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று வாகனம் நிறுத்துவது தொடர்பாக சக குடியிருப்பு வாசியைத் தாக்கியதாக அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிப்பி கில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in