
வேலூர் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் வாகன ஓட்டிகள் அலறிய அடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் அடுத்த ரங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (32). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2010 மாடல் செகண்ட் ஹாண்டில் இண்டிகா காரை 70 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். இந்நிலையில் காரின் முன்பக்க விளக்கு சரியாக எரியாமல் பழுதாகியாகி இருப்பதால், அதனை சரி செய்ய வேலூரில் உள்ள மெக்கானிக் ஷெட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்.
அப்போது சத்துவாச்சாரியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது சென்று டேஷ் போர்டில் திடீரென புகை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக காரை விட்டு இறங்கிய மாதையன் முன்பக்கத்தை திறந்து பேட்டரி ஒயரை அகற்றியுள்ளார். இதில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீ அணைக்கப்பட்டது. இதில் கார் முழுவதுமாக எரிந்து நாசம் ஆனது.
தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கார் தீ பிடித்து எரிந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சத்துவாச்சாரி பகுதியில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கார் தீ விபத்து குறித்து சத்துவாச்சாரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்
விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!