நடைபாதையில் சென்றவர்களை மோதி தூக்கி வீசி விட்டுச் சென்ற கார்... பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

நடைபாதையில் செல்பவர்களை மோதும் கார்.
நடைபாதையில் செல்பவர்களை மோதும் கார்.

கர்நாடக மாநிலம், மங்களூருவிலுள்ள நடைபாதையில் சென்றவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் பலியாகி உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பதை பதைக்க வைக்கும் அந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், மங்களூருவிலுள்ள மன்னகுடா சந்திப்புக்கு அருகே இருக்கும் நடைபாதையில், மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். நேற்று மாலை 4 மணியளவில் அந்தச் சாலையில், வெள்ளை நிற ஹூண்டாய் இயான் கார் ஒன்று நடைபாதையில் சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்கள், மூன்று சிறுமிகள் என ஐந்து பேர்மீது மோதிவிட்டு, மின்கம்பியை உடைத்துக்கொண்டு வேகமாகக் கடந்து சென்றது.

அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த விபத்து குறித்த காட்சிகளில் சுமார் 6 விநாடிகளில் அனைத்தும் நடந்து முடிந்து விட்டன. பாதிக்கப்பட்டவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆட்டோ மூலம் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

கார் மோதியதில் அந்தரத்தில் பறக்கும் பொதுமக்கள்.
கார் மோதியதில் அந்தரத்தில் பறக்கும் பொதுமக்கள்.

இந்த விபத்தில் 23 வயதான ரூபஶ்ரீ என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்துப் பேசிய காவல்துறை தரப்பு, "விபத்து ஏற்படுத்திய காரை மலேஷ் பல்தேவ் என்பவர் ஓட்டிச் சென்றிருக்கிறார். விபத்து ஏற்படுத்தியதற்குப் பிறகு காரை ஒரு ஷோ ரூம் முன்பு விட்டுவிட்டு, தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

பின்னர் அவரது தந்தையை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர்மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறது.

நடைபாதையில் நடந்து செல்பவர்கள் மீது கார் மோதிவிட்டு செல்லும் வீடியோ பார்ப்பவரைகளைக் கதிகலங்கச் செய்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்

10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!

ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!

அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in