லாரி மோதி பள்ளத்திற்குள் பாய்ந்த கார்... ஐ.டி நிறுவன ஊழியர்கள் 3 பேர் பலி!

விபத்தில் சிக்கிய கார்.
விபத்தில் சிக்கிய கார்.

பல்லடம் அருகே லாரி மற்றும் கார் மோதிய விபத்தில் திருச்செங்கோட்டைச் சேர்ந்த நண்பர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் - திருச்செங்கோட்டை சேர்ந்தவர்கள் பூபாபலன் (22), நிதிஷ் (23) மற்றும் பிரேம்குமார் (23). மூவரும் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்கள் பொள்ளாச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூரைக் கடக்கும்போது, எதிரே கள்ளிக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் அருகில் இருந்த பள்ளத்தில் பாய்ந்து, கார் நொறுங்கியது.

நண்பர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் பல்லடம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரின் சடலங்களை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து திருச்செங்கோட்டில் உள்ள 3 பேரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்குப் பதிந்து, சரக்கு லாரி ஓட்டுநரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று மகாளய அமாவாசை... இதைச் செய்தால் கடன் தொல்லைத் தீரும்!

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000... திட்டத்தை உடனே நிறுத்தச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

பேச மறுத்த காதலி... வெறித்தனமாய் 13 முறை கத்தியால் குத்திய காதலன்!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு... சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது!

இன்று வானில் வர்ணஜாலம்... நெருப்பு வளையத்திற்குள் நிகழப்போகும் அற்புதம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in