
உத்தர பிரதேசத்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கையும் களவுமாக மாட்டிக் கொண்டதால் 60வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேர் முகமது(60). அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து தனது இல்லத்திற்கு அழைத்து சென்ற முதியவர், சிறுமியிடம் அத்துமீறியுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுமியை காணவில்லை என தேடிய பெற்றோர் முதியவர் அத்துமீறிய கண்டுபிடித்தனர்.
இதனை அறிந்த அந்த முதியவர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், அவர் மீது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்குப்பதிவு செய்து தேடிய நிலையில், ஃபரித்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் உள்ள மரம் ஒன்றில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
5 வயது சிறுமியிடம் அத்துமீறிய முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.