அனைத்துப் பாடங்களிலும் பெயில்... 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை!

கவியரசு
கவியரசு

திருப்பூரில் நடந்து முடிந்த காலாண்டுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சபரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் டிரைவர் முத்துகுமார். இவர் மனைவி கமலம் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். இவரின் மூத்த மகன் கவியரசு அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் காலாண்டுத் தேர்வு நடைபெற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த 3-ம் தேதி விடுமுறை முடிந்து வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது காலாண்டுத் தேர்வுக்கான மதிப்பெண்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

தேர்வில் கவியரசு அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்ததால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டுள்ளார். உடனடியாக பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் கவியரசுவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த போது ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீஸார் மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாணவன் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்

விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!

கவின் திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in