அதிர்ச்சி... கோயிலில் விருந்து சாப்பிட்ட 90 பேர் மருத்துவமனையில் அனுமதி!

மருத்துவ பரிசோதனை
மருத்துவ பரிசோதனை

மகாராஷ்டிரா மாநிலம், நாந்தேட் மாவட்டத்தில் கோயில் விருந்தில் உணவு உட்கொண்ட 90 பேருக்கு, உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டம், நைகானில் உள்ள ஒரு கோயிலில் நேற்று மாலை ஏராளமானோருக்கு உணவு விருந்து அளிக்கப்பட்டது. இதில் உணவு உட்கொண்ட சுமார் 90 பேருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆம்புலன்ஸ் வாகனம்
ஆம்புலன்ஸ் வாகனம்

இது தொடர்பாக அந்த போலீஸ் அதிகாரி கூறுகையில், “நைகானில் உள்ள ஒரு சிவன் கோயிலுக்கு வெளியே விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அப்போது அவர்களுக்கு சாப்பிட 'அம்பில்' (கஞ்சி) மற்றும் 'கீர்' (பாலில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்பு உணவு) வழங்கப்பட்டது. அம்பிலை அருந்தியதும் பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

அதன் பின்னர், உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரின் உடல்நிலை சீராக உள்ளது. அபாயம் எதுவும் இல்லை” என்றார்.

மருத்துவமனையில் அனுமதி
மருத்துவமனையில் அனுமதி

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து உள்ளூர் போலீஸார் கோயிலுக்கு சென்று பார்வையிட்டு, முறையான விசாரணையை துவக்கினர்.

கோயில் விருந்தில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நாந்தேட் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in