அதிர்ச்சி: அடித்து விரட்டப்பட்ட மாணவன்... கரும்புக் காட்டுக்குள் மாணவி பாலியல் பலாத்காரம்; ஓட்டுநருக்கு வலை

அதிர்ச்சி: அடித்து விரட்டப்பட்ட மாணவன்... கரும்புக் காட்டுக்குள் மாணவி பாலியல் பலாத்காரம்; ஓட்டுநருக்கு வலை

விழுப்புரம் மாவட்டத்தில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த 8-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி, அவரது பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருடன் நேற்று மாலை தனியாக பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், “ஏன் இங்கு தனியாக நின்று பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்... வாருங்கள் போலீஸ் ஸ்டேஷன் போகலாம்” என்று அழைத்துள்ளார். அவர் சொன்னதை நம்பி சென்ற அவர்களை கரும்புக் காட்டுக்குள் அழைத்துச் சென்ற அந்த மனிதர், மாணவனை அங்கிருந்து அடித்து விரட்டி இருக்கிறார்.

பின்னர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் அந்த நபர் பரசுரெட்டிபாளையம் கிராமத்தைச் சார்ந்த மணி என்பது தெரியவந்தது.

அவர் புதுச்சேரி கரியமாணிக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணி செய்கிறார். சம்பவத்தை அடுத்து தலைமறைவாகிவிட்ட மணியை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in