களிமண்ணில் தங்கம் கடத்தல்: உடலில் மறைத்துக்கொண்டு வந்த கில்லாடி பெண் சிக்கினார்

விமானத்தில் பெண் கடத்தி வந்த தங்கம்
விமானத்தில் பெண் கடத்தி வந்த தங்கம்

துபாயிலிருந்து மதுரை வந்த பெண்ணிடமிருந்து ரூ.43 லட்சத்து 24 ஆயிரத்து 524 மதிப்புள்ள 831 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரை கைது செய்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மதுரை விமான நிலையத்தில், துபாயிலிருந்து மதுரை வரும் பயணி தங்கம் கடத்தி வருவதாக சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தின் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அதில், சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த ஒரு பெண்ணை சோதனை செய்ததில், உடலில் மறைத்து வைத்து 3 பச்சை நிற களிமண்ணில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அப்பெண்மீது சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 24 கேரட் 831 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

அவற்றின் மதிப்பு, ரூ.43 லட்சத்து 24 ஆயிரத்து 524 ஆகும். மேலும் தங்கம் கடத்தி வந்த நபரிடம் யாரேனும் கமிஷன் கொடுப்பதாக கூறி தங்கம் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளதா அல்லது அவரே கடத்தி வந்தாரா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மூன்று பச்சை நிற களிமண்ணில் தங்கம்
மூன்று பச்சை நிற களிமண்ணில் தங்கம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in