பட்டப்பகலில் துணிகரம்: பைக்கில் சென்றவரைத் தாக்கி ரூ.82 லட்சம் கொள்ளை!

பட்டப்பகலில் துணிகரம்: பைக்கில் சென்றவரைத் தாக்கி ரூ.82 லட்சம் கொள்ளை!

சென்னை அம்பத்தூரில் பட்டப்பகலில் பைக்கில் சென்றவரைத் தாக்கி 82 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் சென்னையில் சுரேன் இண்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இன்று அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான 82 லட்ச ரூபாயுடன் வானகரத்தில் இருந்து மாதவரம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகில் உள்ள மேம்பாலத்தில் விஜயகுமார் சென்றுகொண்டிருந்தபோது, பின்னாலேயே பைக்கில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் விஜயகுமாரை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டினர். தொடர்ந்து, விஜயகுமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

எப்போதும் போக்குவரத்து அதிகம் உள்ள சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விஜயகுமார் பணம் கொண்டுசெல்கிறார் என்பதை நன்கு தெரிந்தவர்கள் யாரோ தான் பின்தொடர்ந்து வந்து இந்தக் கொள்ளைச் சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கக்கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அந்தப்பகுதியில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.