
எட்டாம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவியை சகோதரர் உறவுடைய வாலிபர் 8 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அந்த மாணவி தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் மாநிலம், கபுர்தலாவில் உள்ள சுல்தான்பூர் லோதி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு இரண்டு மகள் உள்ளனர். இதில் இளைய மகள்(15) அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், நீண்ட நாட்களாக அவர் வயிற்று வலியால் துடித்து வந்தார். அத்துடன் அவரது வயிறும் வீங்கி வந்துள்ளது. இதுதொடர்பாக அவளது தாய் பலமுறை கேட்டும், அந்த மாணவி எதையும் கூற மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தாய், உண்மையை சொல்லாவிட்டால் இறந்து விடுவேன் என மிரட்டினார்.
அப்போது அந்த 15 வயது மாணவி, சொன்ன விஷயத்தைக் கேட்டு அவரது தாய் அதிர்ந்து போனார். மோதன்வால் பகுதியைச் சேர்ந்த தனது சகோதரர் முறை கொண்ட உறவினர் கேஷவ் ஜித் சிங் தன்னை 8 மாதங்களாக மிரட்டி உடலுறவு வைத்திருந்ததாக அந்த சிறுமி கூறினார். இதனால் அவள் கர்ப்பமடைந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அந்த சிறுமியின் தாய், சுல்தான்பூர் லோதி காவல் நிலையத்தில் கேஷவ்ஜித் சிங் மீது இன்று புகார் செய்தார். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து மாணவியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்பது தெரிய வரும் என்று கூறிய போலீஸார், கேஷவ்ஜித் சிங் விரைவில் கைது செய்யப்படுவார் என்றனர்.
அண்ணன் முறை உறவு உள்ள வாலிபர் 15 வயது மாணவியை எட்டு மாதங்களாக மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் கபுர்தலா பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.