
திருவண்ணாமலை அருகே லாரியும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியில் இருந்து கார் ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோயிலுக்கு அமாவாசை நாளான நேற்று சாமி தரிசனத்திற்காக வந்திருந்தனர். பின்னர் அவர்களது காரில் கர்நாடக மாநிலம் தும்கூரை நோக்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
திருவண்ணாமலை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது கார் திடீரென மோதியது.
இதில் காரில் பயணத்தை 2 குழந்தைகள், 4 ஆண்கள், ஒரு பெண் உட்பட எட்டு பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மேலும் ஒரு பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த செங்கம் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கி நொறுங்கிய கார் மற்றும் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து குறித்து அறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி ஆகியோர் நேரில் சென்று மீட்பு பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!
கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!
ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!
ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!