7,854 கிலோ கஞ்சா; 20 ஆயிரம் பேர் கைது: கஞ்சா வேட்டையில் காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கைகள்!

7,854 கிலோ கஞ்சா; 20 ஆயிரம் பேர் கைது: கஞ்சா வேட்டையில் காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கைகள்!

தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை ஒழிக்கும் முயற்சியில் தீவிரமாக அரசு இறங்கியுள்ளது. இந்த நிலையில் ‘ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0’ வின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக காவல்துறை புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள ட்வீட்டில், “காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட சோதனையில் 7,854 கிலோ கஞ்சா மற்றும் 1,83,698 கிலோ புகையிலைப் பொருட்கள் சிக்கியுள்ளன. கஞ்சா வழக்கில் தொடர்புடைய ரூ 25,50,000 மதிப்புள்ள வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரூ.10 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. கஞ்சா வழக்குகள் தொடர்பாக இதுவரை 20,241 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் 246 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், போதைப்பொருளை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள ட்வீட்டில் கஞ்சா வேட்டை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in