வங்கிக் கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட்... மருந்துக் கடை ஊழியருக்கு அதிர்ச்சி; தொடரும் குளறுபடிகள்!

முகமது இத்ரிஸ்
முகமது இத்ரிஸ்

சென்னை தேனாம்பேட்டையில் மருந்துக் கடை ஊழியர் ஒருவரின் வங்கிக் கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தேனாம்பேட்டையில் மருந்து கடையில் பணியாற்றும் முகமது இத்ரிஸ் என்ற இளைஞர் கோட்டக் மஹிந்திரா வங்கியில் கணக்கை நிர்வகித்து வருகிறார். இவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து தனது நண்பருக்கு 2 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். உடனே, வங்கியில் இருந்து வந்த குறுஞ்செய்தியில் அவரது வங்கிக் கணக்கில் பேலன்ஸ் ரூ.753 கோடி உள்ளதாக காட்டியுள்ளது.

இதையடுத்து, அதிர்ச்சியடைந்த இத்ரிஸ், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு போன் மூலம் அழைத்து விவரத்தை கூறியுள்ளார். சில நிமிடங்களிலேயே அவரின் வங்கி கணக்கை வங்கி நிர்வாகம் முடக்கியுள்ளது. மேலும் இதுகுறித்து அவர் விளக்கம் கேட்டும் அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வங்கி கணக்கை முடக்கியது தொடர்பாக அவர் காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக  சென்னை கோடம்பாக்கத்தில்  கார் ஓட்டுநர் ராஜ்குமார் என்பவரின் வங்கி கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆகியிருந்தது.    தஞ்சாவூரில் நேற்று கணேசன் என்பவரது கோட்டக் மஹிந்திரா வங்கி கணக்கில் ரூ.756 கோடி வரவு வைக்கப்பட்டதாக  வந்த மெசேஜ் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
அதைத் தொடர்ந்து தற்போது ரூ.753 கோடி சென்னை இளைஞரின் வங்கி கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்டிருப்பது வங்கி நிர்வாகத்தின் சேவையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in