துயரம்... மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் உயிரைவிட்ட சோகம்!

 சூசை சுந்தரம் - ஆரோக்கியம்மாள் தம்பதி
சூசை சுந்தரம் - ஆரோக்கியம்மாள் தம்பதி

திண்டுக்கல்லில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவனும் இறந்த பரிதாப நிகழ்வு நடந்திருக்கிறது. இருவரது உடலையும் உறவினர்கள் கூடி ஒன்றாக அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திண்டுக்கல் மாவட்டம்,  என் பஞ்சம்பட்டி பெரியார் நகரைச் சேர்ந்தவர்  சூசை சுந்தரம் (வயது 90). இவரது மனைவி ஆரோக்கியம்மாள் (86). இவர்களுக்கு 3 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர்.

இரண்டாவது மகள் டேவிஸ் மேரி மட்டும் தனது குடும்பத்துடன் பஞ்சம்பட்டியிலேயே தங்கி தனது வயதான பொற்றோரைக் கவனித்து வந்தார். சூசை சுந்தரம் திண்டுக்கல் தனியார் தோல் ஆலையில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். 

இந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக நேற்று காலை ஆரோக்கியம்மாள் உயிரிழந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத சூசை சுந்தரம் மனம் உடைந்து போனார். இதனிடையே, பிள்ளைகளும் உறவினர்களும் உயிரிழந்த ஆரோக்கியம்மாளின் இறுதிச் சடங்கு பணிகளை செய்து கொண்டிருந்தனர். மாலை  கல்லறை தோட்டத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்வதற்க்கான ஊர்வலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து கொண்டிருந்தனர். 

இந்நிலையில், சூசை சுந்தரம் துக்கம் தொண்டை அடைக்க மனைவியின் உடல் அருகே  மனைவியின் உடலை பார்த்தவாரே அமர்ந்திருந்தார். சற்று நேரத்தில் அசைவற்றுச் சரிந்த சூசை சுந்தரமும் உயிரிழந்தார். இதனை பார்த்த  பிள்ளைகளும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இருவருக்கும் இறுதிச் சடங்குகளைச் செய்து ஊர்வலமாக எடுத்துச் சென்று கல்லறை தோட்டத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர்.

திருமணம் முடிந்த தேதி  நாளிலிருந்து இணை பிரியாத கணவன், மனைவி சாவிலும் இணை பிரியாமல் இறந்தது பஞ்சம்பட்டி பகுதியில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!

அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!

110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!

1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!

படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி! 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in