தின்பண்டம் வாங்கிக் கொடுத்து 7 வயது சிறுமி பலாத்காரம்... பக்கத்து வீட்டு வாலிபர் கைது!

சிறுமி பலாத்காரம்
சிறுமி பலாத்காரம்

ஜார்க்கண்டில் 7 வயது சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போக்சோ
போக்சோ

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி மாவட்டம், தும்காவில் உள்ள ஹிரன்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கிராமத்தில் 7 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த புத்தேஷ்வர் ஹன்ஸ்தா(25) என்ற வாலிபர் சிப்ஸ் மற்றும் தின்பண்டங்களை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி சிறுமியை வெளியே அழைத்துச் சென்றுள்ளார். இதன் பின் கடையில் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது சிறுமி கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவும், ஹன்ஸ்தா அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

கைது
கைது

இந்த சம்பவம் தொடர்பாக ஹிரன்பூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், புத்தேஷ்வர் ஹன்ஸ்தாவை இன்று கைது செய்தனர். அவர் மீது போக்சோ மற்றும் ஐபிசியின் பிற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!

வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!

ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!

உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in