அதிர்ச்சி! கள்ளச்சாராயம் குடித்த 7 பேர் பலி

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்

ஹரியானாவின் யமுனா நகரில் கள்ளச்சாராயம் குடித்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹரியானா மாநிலத்தின் யமுனா நகர் பகுதியில் மது அருந்திய இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை அன்று உயிரிழந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக போலீஸார் அங்கு சென்றபோது, அடுத்தடுத்து 5 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 6 பேரும் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தது தெரியவந்தது.

அடுத்தடுத்து 7 பேர் உயிரிழந்ததால் மக்கள் அதிர்ச்சி
அடுத்தடுத்து 7 பேர் உயிரிழந்ததால் மக்கள் அதிர்ச்சி

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பேசி உள்ள யமுனா நகர் காவல்துறை கண்காணிப்பாளர் கங்கா ராம் புனியா, கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

7 பேரை கைது செய்துள்ளதாக போலீஸ் அறிவிப்பு
7 பேரை கைது செய்துள்ளதாக போலீஸ் அறிவிப்பு

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே, கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பழைய தொழிற்சாலை ஒன்றை கண்டறிந்துள்ள போலீஸார், அங்கு சாராயம் காய்ச்சி விற்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!

வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐயப்பனுக்கு தங்க அங்கி..  சபரிமலையில் இன்று நடை திறப்பு!

ரூ.25,00,000 பரிசுத் தொகையை... தான் படித்த கல்லூரிகளுக்கு பிரித்துக் கொடுத்த வீரமுத்துவேல்... குவியும் பாராட்டுக்கள்!

செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in