அடுத்த அதிர்ச்சி... அரியலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 7 பேர் பலி!

அரியலூர் அருகே நாட்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து
அரியலூர் அருகே நாட்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து

அரியலூர் அருகே நாட்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை பணிகளில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம், கீழ்பழுவூர் பகுதியில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெற்றியூர் அருகே ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஊழியர்கள் இன்று பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 7 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

மீட்பு நடவடிக்கை
மீட்பு நடவடிக்கை

மேலும் தொழிற்சாலை அருகே நிறுத்தப்பட்டிருந்த 9 இருசக்கர வாகனங்கள், ஒரு வேன் உட்பட வாகனங்கள் எரிந்து சேதமாகின. மேலும் பலர் தொழிற்சாலையின் உள்ளே சிக்கி இருக்கலாம் என அச்சம் நிலவி வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற பட்டாசு குடோன் தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற ஓரிரு நாட்களிலேயே அடுத்த விபத்து நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in