வேலியே பயிரை மேய்ந்தது; ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு: எஸ்.ஐ உள்பட 6 பேர் கைது!

மது பாட்டில்கள்
மது பாட்டில்கள்

குஜராத்தில் காவல் நிலை லாக்கப் அறையில் இருந்து 1.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபானப் பாட்டில்களைத் திருடிய மூன்று காவல் துறையினர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

குஜராத் காவல் துறை
குஜராத் காவல் துறை

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஜூன் மாதம் பாக்கூர் காவல்துறையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்த போது மின்விசிறிகள் அதில் இருந்தன. ஆனாலும், சந்தேகமடைந்த காவலர்கள், அந்த வாகனத்தைச் சோதனையிட்ட போது 75 மின் விசிறி பெட்டிகளுக்குள் 482 மது பாட்டில்களை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

கைப்பற்றப்பட்ட ஸ்காட்ச் விஸ்கி மற்றும் வோட்கா பட்டில்கள் பிக்கப் லாரியில் இருந்து சூரத்தில் வழங்க வேண்டும் என்று அதன் ஓட்டுநரிடம் மது கடத்தல் காரர்கள் பேசி, அத்துடன் ஒப்படைக்கப்படுபவரின் தொலைபேசி எண்ணையும் தந்துள்ளனர். மதுபாட்டில்களை மறைப்பதற்காக 75 மின்விசிறிகளை வாங்கி அதை மறைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

மது பாட்டில்கள்
மது பாட்டில்கள்

இதையடுத்து 1.5 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களும் காவல் நிலையத்தில் லாக்கப்பில் வைக்கப்பட்டன. இந்த நிலையில்,பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அதிகாரிகள் சோதனையிட இருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.

இந்த நிலையில், கைப்பற்றப்பட் பொருட்கள் வைக்கப்பட்ட அறைக்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மது பாட்டில்கள், மின்விசிறி பெட்டிகள் அனைத்தும் காலியாக இருந்தன. இதுகுறித்து காவல் நிலையத்தில் விசாரித்த போது, அந்த அறையின் சாவி காவல் துறை உதவி ஆய்வாளர் அரவிந்த் ராஜிபாயிடம் இருப்பதாக கூறினர்.

கைது
கைது

இதையடுத்து அதிகாரிகள், காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அக்.25-ம் தேதி இரவு 10 மணியளவில் உதவி ஆய்வள்ர அரவிந்த் ராஜிபாய் மதுபானம் இருந்த லாக்கப் அறைக்குள் செல்வது பதிவாகியிருந்தது. அத்துடன் அவர் மதுபாட்டிலுடன் வெளியேறுவதும் பதிவாகியிருந்தது.

மேலும் அன்றைய தினமே இரண்டு முறை சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக மாவட்ட காவல் துறையினர் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

இதையடுத்து உதவி ஆய்வாளர் ராஜிபாய் மற்றும் 2 போலீஸார் உள்ளிட்ட 6 பேர் 1.57,180 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களைத் திருடியது தெரிய வந்தது. அத்துடன், 40,000 மதிப்புள்ள மின்விசிறிகளையும் திருடியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராஜிபாய் உள்பட 6 பேரையும் மகிசாகரில் பாக்கூர் போலீஸார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை இரண்டு நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, காவல் நிலையத்தில் இருந்த மதுபாட்டில் மற்றும் மின்விசிறிகளை போலீஸாரே திருடி கைது செய்யப்பட்ட சம்பவம் குஜராத் காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in