சத்தீஸ்கரில் பரபரப்பு: என்கவுன்ட்டரில் 2 பெண்கள் உள்பட 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

பாதுகாப்பு படை வீரர்கள்.
பாதுகாப்பு படை வீரர்கள்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருடன் இன்று ஏற்பட்ட மோதலில், 2 பெண்கள் உள்பட 6 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.

மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை (கோப்பு படம்)
மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை (கோப்பு படம்)

சத்தீஸ்கர் மாநிலம், பீஜப்பூர் மாவட்டம், பசகுடா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சிபுர்பட்டி கிராமம் அருகே தல்பெரு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள வனப் பகுதியில், மக்கள் விடுதலை கெரில்லா ராணுவம் (பிஎல்ஜிஏ) படைப்பிரிவு எண்-10 ஐ சேர்ந்த மாவோயிஸ்டுகள் முகாமிட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், மாவட்ட ரிசர்வ் காவல்படை (டிஆர்ஜி), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்), அதன் உயரடுக்கு பிரிவு கோப்ரா (உறுதியான நடவடிக்கைக்கான கமாண்டோ பட்டாலியன்) ஆகியவற்றைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் இன்று அப்பகுதியில் கூட்டாக மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கினர்.

மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை (கோப்பு படம்)
மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை (கோப்பு படம்)

அப்போது மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 2 பெண்கள் உள்பட 6 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, உயிரிழந்த 6 பேரின் உடல்கள் மற்றும் ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. இத்தகவலை பஸ்தர் சரக ஐஜிபி சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச் சண்டையில் மேலும் பல மாவோயிஸ்டுகள் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பிஜப்பூர் மாவட்டம், பஸ்தர் மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ளது. இங்கு வரும் ஏப்ரல் 19-ம் தேதி அன்று முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in