சோகம்.. அதிவேகமாக வந்து காரை அடித்து தூக்கிய லாரி... 5 நண்பர்கள் உள்பட 6 பேர் பலி!

லாரி மோதி சிதைந்து கிடக்கும் கார்.
லாரி மோதி சிதைந்து கிடக்கும் கார்.

ஹரியாணாவில் காரில் லாரி மோதிய பயங்கர விபத்தில் 5 நண்பர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விபத்து
விபத்து

ஹரியாணா மாநிலம், பிவானி மாவட்டத்தில் காரில் ஐந்து இளைஞர்கள் தங்கள் நண்பரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது கார் மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த 4 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காரில் இருந்த ஒருவர், லாரி கிளீனர் ஆகியோர் படுகாயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

விபத்தில் நொறுங்கிக் கிடக்கும் கார்.
விபத்தில் நொறுங்கிக் கிடக்கும் கார்.

இந்த பயங்கர விபத்தில் உயிரிழந்த லத்யாலி கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் (30), இந்தவாலி கிராமத்தைச் சேர்ந்த ரவி (22), நர்நாட் பகுதியைச் சேர்ந்த ஜதீந்தர் (30), விகாஸ் (28) மற்றும் புத்தர் கிராமத்தைச் சேர்ந்த நசிப் (27) ஆகியோரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லாரி கிளீனர் யார் என்ற அடையாளம் காணப்படவில்லை.

பிவானியில் உள்ள சவுத்ரி பன்சிலால் சிவில் மருத்துவமனைக்கு இறந்தவர்களின் உடல்களை போலீஸார் அனுப்பி வைத்தனர். பிவானியின் பில்பகுதியில் உள்ள செர்லா கிராமத்திற்கு அருகே நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக போலீஸார் கூறினர். விபத்தில் 5 நண்பர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!

வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!

ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!

உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in