அதிர்ச்சி... பள்ளத்தில் உருண்ட கார்... புனித யாத்திரை சென்ற 6 பேர் உயிரிழப்பு

விபத்தில் 6 பேர் பலி
விபத்தில் 6 பேர் பலி

உத்தராகண்ட்டில் 500 அடி பள்ளத்தில் தவறி விழுந்து கார் விபத்திற்கு உள்ளானதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தராகண்டில் உள்ள ஆதி கைலாஷ் கோயிலுக்கு புனித யாத்திரை செல்வதற்காக பெங்களூருவைச் சேர்ந்த இருவர், தெலங்கானாவை சேர்ந்த இருவர், உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த இருவர் என 6 பேர் காரில் பயணித்தனர். கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு பித்தோராகர் மாவட்டம் வழியாக திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தார்ச்சுலா-லிபுலேக் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென காளி ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் காரில் பயணித்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து நேர்ந்த பகுதி
விபத்து நேர்ந்த பகுதி

இருள் மற்றும் பாதகமான சூழ்நிலை இல்லாத காரணத்தால் உடல்களை மீட்கும் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டது. மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்புத்துறையினர் 6 பேரின் சடலங்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். புனித யாத்திரை சென்று திரும்பிய போது விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in