அதிகாலையில் அதிர்ச்சி; நின்று கொண்டிருந்த லாரியில் வேகமாக மோதிய கார்: 6 பேர் பலி!

கார்-லாரி மோதிய விபத்து
கார்-லாரி மோதிய விபத்து

உத்தரப் பிரதேசத்தில் நின்று கொண்டிருந்த லாரியிப் பின்புறம் கார் மோதிய விபத்தில் ஹரித்வாருக்கு பயணித்துக் கொண்டிருந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மாநிலம், ஷஹ்தாரா பகுதியைச் சேர்ந்த நண்பர்களான ஷிவம், பர்ஷ், குணால், தீரஜ், விஷால் உட்பட 6 பேர் கார் ஒன்றில் ஹரித்வாருக்கு ஆன்மிக சுற்றுலா கிளம்பியுள்ளனர். இன்று காலை 4 மணியளவில், உத்தரப் பிரதேச மாநிலம், முசாபர்நகர் அருகே உள்ள ராம்பூர் திராஹா பகுதி அருகே கார் வந்தது.

அப்போது நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி ஒன்றின் பின்புறம் அதிவேகத்தில் மோதியது.

சிதைந்து கிடக்கும் கார்
சிதைந்து கிடக்கும் கார்

இந்த விபத்தில் காரில் பயணித்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீஸார், 6 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கிரேன் மூலம் விபத்திற்குள்ளான காரை மீட்டனர். இந்த விபத்து காரணமாக நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், போலீஸார் அதனை சீர்படுத்தினர்.

விபத்து
விபத்து

விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விபத்து பகுதியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in