மதம்மாற வற்புறுத்தல்; இளம்பெண்ணை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை - உ.பியில் கொடூரம்

மதம்மாற வற்புறுத்தல்; இளம்பெண்ணை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை - உ.பியில் கொடூரம்

உத்தரபிரதேச மாநிலத்தில் இளம் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மதம் மாற வற்புறுத்தியதாகவும் 6 பேர் மீது பரேலி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பரேலியைச் சேர்ந்த அக்லீம் மற்றும் அவரது சகோதரர்கள் இளம்பெண்ணை கடத்திச் சென்று பிணயத்தொகை கேட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், அக்லீம் உட்பட 6 பேர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பரேலி காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் , "பெண்ணின் புகாரின் பேரில் ஷாஹி காவல் நிலையத்தில் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுதெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் மீதும் சிறுமியை மதம் மாற வற்புறுத்திய குற்றச்சாட்டும் உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் மகளை மதம் மாற வற்புறுத்தியதாக் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்தனர்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in