தற்கொலைகள் முதல் கொலைகள் வரை...: கலங்கி நிற்கும் காவல்துறை

தற்கொலைகள் முதல் கொலைகள் வரை...: கலங்கி நிற்கும் காவல்துறை

தமிழகக் காவல் துறையினர் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பான பொதுநல வழக்கு ஒன்றில் நீதிபதி கிருபாகரன் எழுப்பியிருக்கும் கேள்விகள் தமிழகக் காவல் துறையில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. “காவல் துறையினரின் பிரச்சினைகளைத் தீர்க்க நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று ஆறு ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டும் ஏன் அமைக்கவில்லை?” என்று அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கிருபாகரன், “காவல் துறையினர் தங்கள் குடும்ப நிகழ்வுகளில்கூட கலந்துகொள்ள முடிவதில்லை” என்று கவலையையும் தெரிவித்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரிய பாண்டியனின் மனைவி, ‘எங்களோட சேர்ந்து ஒரு குடும்பப் படம்கூட அவர் எடுத்துக்கிட்டதில்லை’ என்று சொன்னதை இங்கே பொருத்திப் பார்க்கலாம். ஒருபக்கம் தொடர்ச்சியாகக் காவலர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.