
உத்தரப்பிரதேசத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை 7 வயது சிறுவன் பலாத்காரம் செய்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் தேஹாட்டியைச் சேர்ந்த 5 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மருத்துவப் பரிசோதனையில் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.
இந்த கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் மீது 376 மற்றும் போக்சோ சட்டப்பிரிவு 5/6 ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய இருவரும் மைனர்கள் என்பதால் அவர்களின் அடையாளத்தை போலீஸார் வெளியிடவில்லை. இந்த சம்பவம் செப்.17-ம் தேதி மாலை நடந்துள்ளது. தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அக்பர்பூர் காவல் நிலைய அதிகாரி சதீஷ் சிங் கூறுகையில்," இந்த வழக்கு மிகவும் உணர்ச்சிகரமானது. வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும் சிறுவர்கள் என்பதால், வழக்கை விசாரிப்பதில் கவனமாக நடந்து கொள்ள வேண்டியுள்ளது.
7 வயதுக்குட்பட்ட குழந்தை செய்யும் குற்றம் குற்றத்தின் பிரிவில் வராது. சட்ட ஆலோசனைக்குப் பிறகே இந்த வழக்கில் நடவடிக்கை எடுப்போம். இந்த வழக்கில் நேற்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது, ”என்றார்.
உத்தரப்பிரதேசத்தில் 5 வயது சிறுமி 7 வயது சிறுவனால் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.