பெற்ற தாயால் வீட்டிலிருந்து விரட்டப்பட்ட 5 வயது சிறுமி... பாலியல் பலாத்கார கொலை!

சிறுமி மீது பாலியல் பலாத்காரம்
சிறுமி மீது பாலியல் பலாத்காரம்

பெற்ற தாயால் வீட்டிலிருந்து விரட்டப்பட்ட 5 வயது சிறுமி, பாலியல் பலாத்காரம் மற்றும் பரிதாபகர கொலைக்கு ஆளாகி இருக்கிறார். அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள இந்த அதிர்ச்சிகர சம்பவம் அந்நாட்டுக்கு வெளியேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 5 வயது சிறுமி அக்.2 அன்று, ஒரு பெட்ரோல் பங்க் அருகே படுகாயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் சிறுமி, பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக்கு ஆளாகி இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸார் மைக்கேல் செர்ரி என்ற நபரை கைது செய்து, சிறார் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த விசாரணையில், 5 வயது சிறுமியை அவரது தாயார் துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியதும், அடைக்கலத்துக்கு வாய்ப்பின்றி அப்பகுதியில் உள்ள வீடுகளில் உணவு பெற்று அவர் நாட்களை போக்கியதும் தெரிய வந்தது.

பலாத்காரம்
பலாத்காரம்

வீடற்ற நபர்களுடன் சேர்ந்து தங்கியிருந்த சிறுமி, குழந்தைகளை குறிவைக்கும் மைக்கேல் செர்ரியால் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலைக்கு ஆளாகியிருக்கிறார். இதனையடுத்து 5 வயது சிறுமியின் தாய் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்கா என்றாலே செழிப்பும், பண்பட்டதுமான கனவுதேசமாக கட்டமைக்கப்படும் வெளியுலக பார்வைக்கு அப்பால், அதன் மோசமான மறுமுகத்தை 5 வயது சிறுமிக்கு நேர்ந்திருக்கும் துயரம் வெளிப்படுத்தி இருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in