
இந்திய எல்லைக்கு அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல் படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் நுழைந்து விடக் கூடாது மற்றும் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் கடலோர காவல் படை அவ்வப்போது ரோந்து கப்பலில் சென்று கண்காணித்து வருவது வழக்கம்.
இந்த நிலையில், இன்று காலை தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இலங்கை ஃபைபர் படகு ஒன்றை பிடித்த இந்திய கடலோர காவல் படையினர் அதனை சோதனை செய்தனர். அப்போது அதில் ஐந்து இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி இந்திய கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த கடலோர காவல் படை கப்பற்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
ப்பா... கிளாமரில் தெறிக்க விட்ட தமன்னா
நெகிழ்ச்சி... சாவிலும் இணைபிரியாத அக்கா, தம்பி!
அடுத்த சர்ச்சை... தேசிய கீதத்தை அவமானப்படுத்திய மன்சூர் அலிகான்!
மன்சூர் அலிகான் தப்புன்னா... ரஜினி பேசுனதும் தப்பு தான்!
அடாவடி வசூல்... கழிவறை கட்டண குத்தகைதாரருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து தீர்ப்பு!