உத்தராகண்ட் சுரங்க விபத்து: தொழிலாளர்களை மீட்க 5 அம்ச திட்டம் ரெடி!

உத்தராகண்ட் சுரங்க விபத்து
உத்தராகண்ட் சுரங்க விபத்து
Updated on
1 min read

உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க 7வது நாளாக முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 5 அம்ச திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அந்தப் பாதையின் ஒரு பகுதியில் கடந்த 12-ம் தேதி மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் 40 தொழிலாளா்கள் சுரங்கத்தின் நடுவே சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

உத்தராகண்ட் சுரங்க விபத்து
உத்தராகண்ட் சுரங்க விபத்து

தொழிலாளர்களை மீட்க சுரங்கத்தில் துளையிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், மேலிருந்து மண் சரிவதாலும் இயந்திரங்கள் பழுதானதாலும் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, மீட்பு நடவடிக்கையில் பிரதமர் அலுவலகமும் தலையிட்டு பணிகளைத் தொடங்கியுள்ளது.

பிரதமர் அலுவலக அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டனர். சுரங்கப்பாதையின் மேல்பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடுவது, சுரங்கத்தில் புதியபாதை அமைப்பது, தொழிலாளர்களுக்கு உணவு, சத்து மருந்துகள், குடிநீர் வழங்குவதற்காக 6 அங்குல அகலமுள்ள குழாய் பொருத்துவது ஆகிய 5 அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டன.

உத்தராகண்ட் சுரங்க விபத்து
உத்தராகண்ட் சுரங்க விபத்து

அவற்றைச் செயல்படுத்தி தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் இன்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொழிலாளர்களை மீட்பதற்கான அனைத்து பணிகளையும் தீவிரப்படுத்துமாறு அவர்கள் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in