ஒடிசா பெண் பாலியல் பலாத்காரம்; மானாமதுரை சிறுவன் உட்பட 5 பேர் கைது!

பாலியல்  பலாத்காரம்
பாலியல் பலாத்காரம்

மானாமதுரை செங்கல் சூளையில் பணியாற்றி வந்த ஒடிசா மாநில பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

செங்கல் சூளை
செங்கல் சூளை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வேதியரேந்தல் செல்லும் சாலையில் கீழமேல்குடி கிராமத்தைச் சேர்ந்த அக்னி பாண்டி என்பவர் செங்கல் தயாரிக்கும் காளவாசல் வைத்துள்ளார். இதில் கீழமேல்குடி, தெக்கூர், மானாமதுரை மற்றும் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கு ஒடிசாவைச் சேர்ந்த 30 வயது பெண் கடந்த 7 வருடங்களாக பணிபுரிகிறார். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்து விட்டார். இவரது இரண்டு ஆண் குழந்தைகள் மூங்கில் ஊரணியில் உள்ள ஆதரவற்றோர் பள்ளியில் தங்கி படிக்கின்றனர்.

இந்நிலையில் அந்த பெண் மட்டும் காளவாசலில் தனியாக தங்கி பணிபுரிகிறார். இவருக்கும் அதே களவாசலில் வேலை பார்த்து வந்த கீழப்பசலை கிராமத்தை சேர்ந்த ஆதி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு குடிபோதையில் கீழமேல்குடி தெக்கூர் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் 21, கஜேந்திரன் 19,அருண்குமார் 22 மற்றும் ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 பேருடன் சேர்ந்து ஒடிசா பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மானாமதுரை காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். வடமாநில பெண் புகார் என்பதால் மாவட்ட எஸ் பி அரவிந்தன் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நேரில் விசாரனை நடத்தி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்ததில் கஞ்சா போதையில் ஆதி தன் நண்பர்களை வரவைத்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கீழப்பசாலை கிராமத்தை சேர்ந்த ஆதி 20 மற்றும் கீழமேல்குடி தெக்கூரை பகுதியை சேர்ந்த அருண் குமார் 22, கஜேந்திரன்19, ரஞ்சித் 21 மற்றும் சிறுவன் உட்பட 5 பேர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் வாள் உட்பட பயங்கர ஆயுதங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in