அரசு பஸ் மோதி உருக்குலைந்த ஆட்டோ... 5 பேர் உடல் நசுங்கி பலி!

ஆந்திராவில் நடைபெற்ற விபத்து
ஆந்திராவில் நடைபெற்ற விபத்து

ஆந்திரா மாநிலத்தில் ஆட்டோவும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உருக்குலைந்து கிடக்கும் ஆட்டோ
உருக்குலைந்து கிடக்கும் ஆட்டோ

ஆந்திர மாநிலம், ஆஜாத் காலனியைச் சேர்ந்த  10 பேர் ஆட்டோ ஒன்றில் மல்லீலா கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். கடப்பா மாவட்டத்தில் உள்ள எர்ரகுண்டலா அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபம் அருகே ஆந்திர மாநில அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஆட்டோ முழுவதும் நசுங்கி சேதமடைந்தது. இதனால் ஆட்டோவில் பயணித்த மகமத் (25), ஜாக்கீர்(10), ஹசீனா( 25 )அமீனா (20) ஆகிய நான்கு பேர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். 

விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பொதட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விபத்தில்  மரணம் அடைந்தவர்களின் உடல்கள் பொதட்டூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in