பகீர்... கனடாவில் துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி

பகீர்... கனடாவில் துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி

கனடா நாட்டில் ஒன்டோரியோ நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 6 மற்றும் 12 வயது குழந்தைகள் உட்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கனடாவின் வடக்கே ஒன்டாரியோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர் என்று அந்நாட்டு ஊடகம் தெரிவிக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளனர். அதில், அங்குள்ள தான்கிரேட் சாலையில் 41 வயது மதிக்கத்தக்க நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர். அங்கு சென்ற போலீஸார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீஸாருக்கு, தொடர்ந்து 10 நிமிடங்களில் மற்றொரு தொலைபேசி அழைப்பு வந்தது. இதன்படி சென்று பார்த்தபோது, துப்பாக்கிச் சூடு காயங்களுடன் 45 மதிக்கத்தக்க நபர் உயிரிழந்து கிடந்துள்ளார். அதனுடன், 36 வயதுடைய பெண், 6 மற்றும் 12 வயதுடைய 2 பேரின் உடல்களும் காணப்பட்டன. அவர்களும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர் என கூறினர்.

இந்த மரணங்கள் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in