நடுக்கடலில் நாட்டுப்படகு கவிழ்ந்து 5 மீனவர்கள் தத்தளிப்பு... பத்திரமாக மீட்ட சக மீனவர்கள்!

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் (கோப்பு படம்)
நடுக்கடலில் தமிழக மீனவர்கள் (கோப்பு படம்)
Updated on
2 min read

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நாட்டுப் படகு கடலுக்கு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், கடலில் தத்தளித்த 5 பேரை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ரெமல் புயலாக உருவாக உள்ளது. இதன் காரணமாக வங்கக்கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தனர்.

கொந்தளிப்புடன் காணப்படும் வங்கக்கடல்
கொந்தளிப்புடன் காணப்படும் வங்கக்கடல்

இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பகுதியில் இருந்து 5 மீனவர்கள் நாட்டுப் படகு ஒன்றில் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். கரையில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, கடலில் கடுமையான சூறாவளிக் காற்று வீசி உள்ளது. இதனால் கடும் கடல் கொந்தளிப்பில் சிக்கி நாட்டுப் படகு கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 5 மீனவர்களும் கடலில் விழுந்தனர்.

பாம்பன் பகுதி
பாம்பன் பகுதி

இந்நிலையில் இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மரைன் போலீஸார் மீனவர்களை தேடும் பணிகளை தீவிரப்படுத்தினர். மீனவர்கள் கடலில் தவறி விழுந்த தகவல் அறிந்ததும், சக மீனவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கடலுக்கு படகில் சென்றனர்.

அங்கு நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 5 மீனவர்களையும் அவர்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. மீனவர்கள் தடையை மீறி ஆபத்தான முறையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசு வென்ற இந்திய குறும்படம்... ரசிகர்கள் வாழ்த்து!

வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி; முன்னாள் பாஜக நிர்வாகி கைது!

அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து எரிவாயு கசிவு; 89 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கட்டுக்கட்டாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்... அதிமுக பிரமுகர் கைது!

ப்ரேக்-அப்... அடுத்த ரிலேஷன்ஷிப்பிற்கு ரெடி... மெளனம் கலைத்த ஸ்ருதிஹாசன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in