தொடரும் மழை... பத்திரம் மக்களே... ஒரே நாளில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி!

மின்சாரம் தாக்கி 5 பேர் பலி
மின்சாரம் தாக்கி 5 பேர் பலி

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை கடுமையான வெயில் சுட்டெரித்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக பரவலாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கன மழை துவங்கி மிதமான மழை வரை பெய்து வருகிறது. சுமார் 3 மாதங்களாக அதிகப்படியான மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், மின் வயர்களில் அடிக்கடி மின்கசிவு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் தாக்கி 5 பேர் பலி
மின்சாரம் தாக்கி 5 பேர் பலி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சாணங்காட்டு தோட்டம் என்ற பகுதியில் தங்கவேல் (58) மற்றும் அவரது மனைவி சரஸ்வதி (50) ஆகியோர் வசித்து வந்தனர். இன்று காலை வீட்டின் அருகில் உள்ள மரம், மின்சார வயர் மீது உரசி கொண்டிருந்ததை கண்ட இருவரும், மரக்கிளைகளை வெட்ட முயற்சி செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். தகவல் அறிந்த குமாரபாளையம் போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மின்சாரம் தாக்கி 5 பேர் பலி
மின்சாரம் தாக்கி 5 பேர் பலி

இதே போல் விழுப்புரம் மாவட்டம் தேவனூரில் வீடு ஒன்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சென்னை படப்பை பகுதியைச் சேர்ந்த மேஸ்திரி ஜோதி என்பவர் பணியாற்றி வந்தார். கட்டிடத்தில் உள்ள மின்விளக்கு ஒன்றை வேறு இடத்திற்கு மாற்ற எடுத்த போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் கட்டட பணி நடைபெற்று வரும் நிலையில், அங்கு மின்சாரம் தாக்கி இளைஞர் ஆனந்த் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இதேபோல் சேலம் அம்மாபேட்டையில் பெயர் பலகை மாற்ற முயன்ற தண்டபாணி என்பவர், தந்தை அர்த்தனாரி கண் முன்பே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற தந்தை அர்த்தனாரி பலத்த காயமடைந்ததை அடுத்து, அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

பெரும்பாலான விபத்துகளில் சம்பந்தப்பட்டவர்களின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே வீடுகளில் மின்சார வயர்கள், மழை நீரில் படாதவாறு பார்த்துக் கொள்வதோடு, மின்கசிவு ஏதேனும் இருந்தால் உடனடியாக மின்சார ஊழியர்களை கொண்டு அதனை சரி செய்து கொள்ள வேண்டுமென மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக மின்சாதனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மின்வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in