அதிர்ச்சி! மின்சாரம் தாக்கி 5 எருமைகள் பலி! மின்வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால் துயரம்

மின்சாரம் தாக்கி எருமைகள் பலி
மின்சாரம் தாக்கி எருமைகள் பலி

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பூதூர் பகுதியில் மின்சாரம் தாக்கி 5 எருமை மாடுகள் உயிரிழந்தன.

திருவள்ளூர் மாவட்டம், பூதூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். விவசாயியான இவர் சொந்தமாக 5 எருமை மாடுகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் எருமைகளை நேற்று மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது, வயலுக்குச் செல்லும் மின் கம்பத்திலிருந்த மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. அதனை எருமைகள் மிதித்ததில், 5 எருமைகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன. நல்வாய்ப்பாக மாடுகளை ஓட்டி சென்ற சந்திரன் உயிர் தப்பினார்.

மின்சாரம் தாக்கி எருமைகள் பலி
மின்சாரம் தாக்கி எருமைகள் பலி

இது குறித்து சோழவரம் காவல் நிலையத்திற்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின் கம்பி அறுந்து விழுந்தது தொடர்பாக, மின் வாரியத்திற்கு தகவல் அளித்தும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது. கடந்த 6ம் தேதி இதே பூதூர் பகுதியில் கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து விழுந்து கனகா என்ற பெண் உயிரிழந்தார். இந்நிலையில், சோழவரம் மின்வாரியத்தின் தொடர் அலட்சியத்தால் 5 எருமைகள் தற்போது உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது... 4 மணி நேரம் அவகாசம் தர்றேன்... நடிகர் சங்கத்தை எச்சரித்த மன்சூர் அலிகான்!

உத்தராகண்ட் சுரங்க விபத்து; 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது வீடியோ

பரபரப்பு.. வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்... ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

இறப்புக்கு முன் நடிகர் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உருக்கம்!

ரூ.1,760 கோடி பணம், மதுபானம் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அதிரடி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in