அதிர்ச்சி... திருப்பதியில் செம்மரம் கடத்த முயன்றதாக தமிழகத்தை சேர்ந்த 48 பேர் கைது!

செம்மரம் கடத்தல்
செம்மரம் கடத்தல்

திருப்பதியில் செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தை சேர்ந்த 48 பேரை ஆந்திர மாநில போலீஸார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செம்மர கட்டைகள்
செம்மர கட்டைகள்

ஆந்திர மாநிலம் கர்னூல் சரக் டி.ஐ.ஜி செந்தில்குமார் தலைமையில் செம்மர கடத்தல் தடுப்புக்க்கான சிறப்பு அதிரடிப்படை போலீஸ் பிரிவு செயல்பட்டு வருகிறது. இவர்கள் இன்று வழக்கம் போல் திருப்பதியை அடுத்த ஸ்ரீனிவாச மங்காபுரம் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் சோதனைக்கு சென்றனர்.

இந்த சோதனையின் போது பிடிபட்ட தமிழர் ஒருவரை கைது செய்து செம்மரங்களை பறிமுதல் செய்தனர். இதே போல கடப்பா மாவட்டத்தில் உள்ள பாலப்பள்ளி என்ற இடத்திலும், அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள 3 இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை கடத்த பயன்படுத்திய 5 கார்கள், ஒரு ஆட்டோ மற்றும் 3 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததுடன் தமிழகத்தை சேர்ந்த 48 பேரை கைது செய்தனர்.

ஆந்திர சிறப்பு படையினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையின் போது தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 51 செம்மரங்கள் கைபற்றப்பட்டுள்ளன.

கைபற்றப்பட்ட செம்மரங்கள் உயர்தரமானவை என்பதால் இதன் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என டி.எஸ்.பி செஞ்சுபாபு கூறியுள்ளார். மேலும் கடத்தலில் ஈடுபட்டு பிடிபட்டவர்களில் பலர் ஏற்கனவே செம்மர கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து இவர்கள் அனைவர் மீதும் மாநில வனத்துறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட்டு திருப்பதியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்க உள்ளதாக அதிரடிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in