எருமேலி அருகே பஸ் கவிழ்ந்தது.... சபரிமலை சென்ற ஐயப்ப பக்தர்கள் 43 பேர் காயம்!

ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து
ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து
Updated on
1 min read

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற ஆந்திரா பக்தர்களின் பேருந்து, எருமேலி அருகே கவிழ்ந்த விபத்தில் 43 பக்தர்கள் காயமடைந்தனர்.

கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். தற்போது கேரள மாதமான துலா எனப்படும் ஐப்பசி மாத பூஜைக்காக 17-ம் தேதி ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

இதையடுத்து ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து முன்பதிவு செய்துகொண்டு பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

விபத்துக்குள்ளான பேருந்து
விபத்துக்குள்ளான பேருந்து

இதன் ஒரு பகுதியாக கோலார் பகுதியில் இருந்து கர்நாடக ஐயப்ப பக்தர்கள் பேருந்து ஒன்றில் சபரிமலை கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். பேருந்து எருமேலி அருகே அத்திவளம் பகுதியில் சென்ற போது, திருப்பத்தில் திரும்ப முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இதில் பேருந்தில் பயணித்த 43 பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிரப்பள்ளி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீஸார், விபத்தில் சிக்கிய பேருந்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீராக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in