
உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கப்பணியின் போது ஏற்பட்ட மண் சரிவில் 40 பேர் சிக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உத்தர் காசி மற்றும் யமுனோத்திரி கோயில்களை இணைக்கும் வகையில் நான்கு கோயில் சாலை திட்டப் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கப்படுவதன் மூலம் பயண தூரம் 26 கிலோ மீட்டர்கள் வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் சுமார் 4.5 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
இன்று இந்த சுரங்க பாதையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தின் போது 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தகவல் அறிந்தவுடன் மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துவக்கி உள்ளனர்.
தற்போது வரை உயிரிழப்புகள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், அனைவரையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்பன் யதுவன்ஷி தெரிவித்துள்ளார்.
மீட்பு பணிகள் முடிவடைந்த பிறகு சுரங்கம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான கட்டுமானப்பணி காரணமாக இந்த சுரங்கம் இடிந்து விழுந்ததா என விசாரணை நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!
வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!
மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!
திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!